
நீலாய், 17 பிப்ரவரி — கல்வியளிக்க ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றிய, மலேசியத் தமிழ்ப்பள்ளி கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஐயா திரு. ராமச்சந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் இன்று காலமானார்.
திரு. ராமச்சந்திரன் சுப்ரமணியம் அவர்கள், காலவே தோட்ட தமிழ்ப்பள்ளியின் முன்னாள் ஆசிரியராகவும் (SRJK (T) LADANG GALLOWAY, DENGKIL), தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் புறப்பாட நடவடிக்கை துணைத் தலைமையாசிரியராகவும் (SJK (T) TAMAN PERMATA, DENGKIL), லாடாங் சென்டாயான் தமிழ்ப்பள்ளியின் (SJK (T) LADANG SENDAYAN) தலைமையாசிரியராகவும் பணியாற்றி வந்தவர்.
சிறந்த கல்வி வழிகாட்டியாக பல மாணவர்களின் வாழ்க்கையில் நிலையான அடித்தளத்தை அமைத்துவந்த இவர், தன்னலமற்ற சேவையுடன் மாணவர்களுக்கு ஒளிக்கனலாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. அவரது பொறுமை, நேர்மை மற்றும் கடின உழைப்பு அனைவரின் மனதிலும் என்றும் ஒளிரும்.
அவரது மறைவு கல்வி சமூகம் மட்டுமின்றி, அவரை நெருக்கமாகக் கொண்டாடிய மாணவர்கள், பெற்றோர், சக ஆசிரியர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு பேரிழப்பு.
மேல் விபரங்களுக்கு Lingess Rao (017-3439709) மற்றும் Kalaimathi (011-63781783) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.
மகத்துவம் மிக்க இழப்பை எங்களால் ஈடு செய்ய முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் நம சிவாய!
-வீரா இளங்கோவன்
