
மலேசியாவுக்கு தனித்துவமான ஒரு முதன்மை சிகிச்சை முறைமை உள்ளது. இதில் சாதாரண மலேசியர்களுக்கு ஒவ்வொரு பகுதியில் உள்ள பல தனியார் மருத்தவர்கள் (GPs) மூலம் மலிவான விலைகளில் பலவித சிகிச்சை சேவைகளைப் பெற முடிகிறது.
இந்த முறைமை, மக்களுக்கு பயனாக வடிவமைக்கப்பட்டதாக இருந்தது.தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் முதன்மை சிகிச்சை கிளினிக்குகளை வாங்கி, தனி நபர் GPs-ஐ வியாபாரத்தில் இருந்து வெளியேற்றுவதால் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது என்று மலேசியாவின் முன்னாள் தனியார் மருத்துவப் பயிற்சியாளர் சங்கத்தின் (FPMPAM) தலைவர் டாக்டர் ஸ்டீவன் சவ் கூறுகின்றார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் லாபம் பெருக்குவதற்காக, அவர்கள் சிகிச்சை விலைகளை அதிகரிப்பது அச்சத்தை உருவாகியுள்ளது.
மலேசியா, உலகிலேயே மிகவும் மலிவான சுகாதார சேவைகளை வழங்குகின்றது.இது தற்போது வெளிநாட்டு நிதி ஆதிக்கத்தால் ஆபத்தில் உள்ளது.
-ஶ்ரீஷா கங்காதரன்