
உலு சிலாங்கூர், 23 பிப்ரவரி — உலு சிலாங்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தெய்வீக அனுபவத்தை பெற்றனர்.

இந்த புனித நிகழ்வில் வர்த்தகர்கள், சமூகப் பிரமுகர்கள், மற்றும் பல்வேறு பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். பூஜைகள், வேத மந்திரங்கள், அபிஷேகங்கள், மற்றும் மங்கள இசைகள் ஒலித்தன.
மேலும், “மக்கள் கலைஞர்” கவிமாறனும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கும்பாபிஷேகம் நிறைவடைந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, ஆன்மிக மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்வு அனைவரும் ஒருமித்து, பக்திப் பரவசத்தில் மூழ்கி அனுபவிக்கும் தருணமாக அமைந்தது.
-யாழினி வீரா