Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

பினாங்கில் மண் சரிவு அதிகரிப்பு: ஜலான் துண் சார்டன் இன்னும் மூடப்பட்ட நிலையில் உள்ளது

பினாங்கு, 25 அக். – பினாங்கில் உள்ள ஜலான் துண் சார்டன் சாலையில் புதியதாக ஆறு மண் சரிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அந்தச் சாலை தற்போது பொதுமக்களுக்கு திறக்க முடியாத நிலையில் உள்ளது.

மாநில நிர்வாகம் தெரிவித்ததாவது, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மண் நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் சாலையில் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வரை சாலை மூடப்பட்டே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநில திட்டமிடல் குழு தலைவர் ஜைரில் கீர் ஜோஹரி தெரிவித்ததாவது, “இன்றுக் காலை முதல் மீளமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன, ஆனால் தொடர்ந்த மழை காரணமாக அவை இடைநிறுத்தப்பட்டன. நிலத்தின் நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளதால், சாலை திறக்க இயலாது,” என்றார்.

இதனிடையே, பொதுமக்கள் அந்தப்பகுதியை தவிர்த்து மாற்று சாலைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறையும், மீட்பு குழுவும் அந்தப் பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளன.

மண் சரிவுகள் மேலும் ஏற்படாதவாறு பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு, நிலத்தின் நிலைத்தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்கின்றன.

-யாழினி வீரா

Scroll to Top