Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

மலேசிய இயக்குநர் கார்த்திக் ஷாம்லனின் அடுத்த பட அறிவிப்பு – செப்டம்பர் 10ம் தேதி!

கார்த்திக் ஷாம்லன், “என் வீட்டுத் தோட்டத்தில்”, “அச்சம் தவிர்”,“அடை மழை காலம்”, “சுகமாய் சுப்புலட்சுமி”, “C4CINTA” போன்ற படங்களின் மூலம் மலேசியத் தமிழ்ப் படங்களுக்கு புதிய அடையாளம் தந்தவர். நுணுக்கமான கதை பின்னணி, மனதை கவரும் காட்சியமைப்பு, உணர்ச்சியோடு கலந்த உரையாடல்கள் ஆகியவை அவரது படங்களின் பலம். இவரது படங்கள் மலேசியாவிலேயே அல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளை பெற்றுள்ளன.

மலேசியத் திரையுலகில் தனித்துவமான கதை சொல்லும் பாணியால் தனக்கென ஒரு தடம் பதித்திருக்கும் இயக்குநர் கார்த்திக் ஷாம்லன், தனது புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பை செப்டம்பர் 10ம் தேதி வெளியிடவுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது புதிய படத்தின் அப்டேட்ஸ் கொடுத்துள்ளார். அதில்,
“திரையரங்க திரையில் படத்தைப் பார்ப்பதற்கான அந்த உணர்ச்சியை எதுவும் மீற முடியாது. இப்போது என் அடுத்த படத்தின் நடிகர் பட்டியலை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

புதிய படத்திற்கான குறியீட்டு பெயராக “#ஜெய்க்ரோம்” என்பதையே வெளிப்படுத்தியுள்ளார். அவரது புதிய படம் எப்படிப்பட்ட கதை, எந்த வகை நடிகர் அணியுடன் உருவாக இருக்கிறது என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பெயரே மர்மத்தை தாங்கி நிற்கும் இந்த படம், கார்த்திக் ஷாம்லனின் அடுத்த பெரும் படைப்பாக அமையும் என நம்பப்படுகிறது.

Scroll to Top