
ஈப்போ, 9 ஏப்ரல்: ஈப்போவில் உள்ள கம்போங் ராபாட் பகுதியில் ஒரு வீடு மீது ஐந்து முறை மாலடோவ் காக்டெய்ல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது ஒரு சந்தேகநபரைத் தேடி வருகின்றனர்.
ஈப்போ காவல்துறை தலைவர் அபாங் ஸைனல் ஆபிடின் அபாங் அஹ்மத் வெளியிட்ட தகவலின்படி, 62 வயதான ஒரு பெண் கடந்த மார்ச் 26 முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து முறை புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து நடத்திய தொடக்க விசாரணையில், வீட்டு வாசலிலும், கார் நிறுத்தும் பகுதியில், கதவிலும், சுவரிலும் எரிமூட்டம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், வீட்டின் முன்வாசலில் கடனைத் திருப்பித் தரக் கோரி எழுதிய மிரட்டல் நோட்டும் விடப்பட்டிருந்தது.
சம்பவம் குறித்து தீவிரவிசாரணைகள் தொடர்கின்றன. இந்த வழக்கு மலேசிய தண்டனைச் சட்டத்தின் 435ஆம் பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது, இது தீவைத்து சேதப்படுத்தும் குற்றமாகும்.
இந்த சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலும் உள்ளவர்கள், முதன்மை விசாரணை அதிகாரி எஸ். தசாரதனை 012-5644485 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுள்ளனர்.
-யாழினி வீரா