
படம் : பெர்னாமா
கோலாலம்பூர்,18 பிப்ரவரி – நேஷனல் ஹாக்கி அரங்கம் ஜே2 அரங்கத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதிநிதி டெரிட்டரி ஸ்டிங்கர்ஸை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2025 மலேசிய ஹாக்கி லீக் (எம்எச்எல்) 2025 சாம்பியன்ஷிப்பிப் பட்டத்தை பெற்றது திரெங்கானு ஹாக்கி அணி.
கடந்த சீசனில் ஏற்பட்ட ஏமாற்றத்தை போக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. வீரர்கள் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தினர். லீக் சாம்பியன்ஷிப்பைப் பெற அவர்கள் கடினமாக விளையாடினர் என்று போட்டிக்குப் பிறகு சந்தித்தபோது டிஎச்தி தலைமை பயிற்சியாளர் முகமட் ஹர்பிஸி பஹரோம் கூறினார்.
தனது ஆட்டக்காரர்கள் அடைந்த வெற்றி டிஎச்திக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று முகமட் ஹர்பிஸி நம்பிக்கையுடன் இருக்கிறார். தற்போது அவர்கள் அடுத்த வாரத்திற்கான டிஎன்பி கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்துகிறார்கள்.
-ஶ்ரீஷா கங்காதரன்