Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

வர்த்தகப் போருக்கு தற்காலிக நிம்மதி – லண்டனில் அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை

படம்: ஊடகம்

லண்டன் 11 ஜூன் : உலகப் பொருளாதாரத்தை ஆழமாக பாதித்துவரும் அமெரிக்கா-சீனா வர்த்தகப் போருக்கு ஒரு தற்காலிக இடைவேளையை உருவாக்கும் நோக்கில், இரு நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகள் திங்கட்கிழமை லண்டனில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சீன துணைப் பிரதமர் ஹே லிஃபெங் தலைமையிலான குழு, பக்கிங்ஹாம் அரண்மனை அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லங்காஸ்டர் ஹவுஸில் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக், கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தகப் பிரதிநிதி ஜாமிசன் கிரீர் ஆகியோருடன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோவும் இதில் பங்கேற்றார்.

இந்த பேச்சுவார்த்தைகள் செவ்வாய்க்கிழமைவும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுகளில், இரு நாடுகளும் பரஸ்பரம் விதித்த உயர் வரிகளை 90 நாட்கள் நிறுத்த ஒப்புக்கொண்டிருந்தன.

செயற்கை நுண்ணறிவு, விசா தடைகள், அரிதான தாதுக்களின் ஏற்றுமதி உள்ளிட்ட பிரச்சனைகளில் இரு நாடுகளும் கடுமையாக மோதிய நிலையில், இந்த சந்திப்பு ஒரு நேர்மறை திருப்பமாக பார்க்கப்படுகிறது. வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி இப்போது உலகத்தின் கவனத்தை பெறுகிறது.

-ஸ்ரீதரன்

Scroll to Top