Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

காலநிலை நடவடிக்கைகள் ‘Maqasid al-Syariah’ நோக்கில் பார்க்கப்பட வேண்டும்- Sultan Nazrin

கோலாலம்பூர் : பேராக் ‘Sultan Nazrin Shah’ அவர்கள், காலநிலை மாற்ற சவால்களை சமாளிக்க புதிய சிந்தனையும் தெளிவான திசையும் தேவை எனக் கூறினார். அனைத்துச் செயல்களும் ‘Maqasid al-Syariah’ நோக்கில் காணப்பட வேண்டும் என்றும், பூமியை பாதுகாப்பது மனிதரின் புனிதப் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவர், “காலம் குறைந்து வருகிறது. துணிச்சலாகவும் ஒன்றுபட்டும் செயல்பட்டால் நல்ல மாற்றம் சாத்தியம்” என்று எச்சரித்தார். காலநிலை பிரச்சினை அரசியல் கருவியாக மாறிவிட்டதாகவும், இதனால் உலகளாவிய ஒற்றுமை குறைகிறது என்றும் கூறினார்.

Sultan Nazrin, மனிதன் Khalifah (பூமியின் காவலர்) எனக் al-Quran மற்றும் Hadis குறிப்பிடப்பட்டுள்ளதை நினைவூட்டினார். பசுமையான பூமியை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கொடுக்க வேண்டியது கடமை என அவர் தெரிவித்தார்.

நிதி துறையின் பங்கு முக்கியம் என அவர் சுட்டிக்காட்டினார். 2024-இல் USD15 பில்லியன் Sukuk Hijau மூலம் சோலார் பண்ணை, பசுமை போக்குவரத்து, உயிரின பல்வகைத் திட்டங்கள் போன்றவை நிதியளிக்கப்பட்டன.

“பசுமை தொழில்நுட்பம் உண்மையில் பிரச்சினையை தீர்க்க வேண்டும், வேறு சிக்கல் உருவாக்கக் கூடாது,” என்று அவர் எச்சரித்தார்.

Scroll to Top