
சென்னை, 17 ஏப்ரல்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
தென்னிந்தியச் செங்குந்த மகாஜன சங்கத்துடன் தொடர்புடைய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களின் பெயர்கள் சாதியைக் குறிக்கக்கூடாது என்றும், இது சமூக ஒற்றுமைக்கு விரோதமானது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மேலும், சாதி அடிப்படையில் செயல்படும் சங்கங்கள் சட்டவிரோதமானவையாக கருதப்பட்டு அவற்றின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், சமூக பதிவாளர்களுக்கு இந்த மசோதாவை நடைமுறைப்படுத்தும் வகையில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சாதிப் பெயர்கள் கொண்ட கல்வி நிறுவனங்கள், அவை நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை சட்ட விதிகளுக்கு உட்பட்டு 4 வாரங்களில் திருத்தங்களை செய்யாதால், அந்த நிறுவனங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
– இளவரசி புவனஷங்கரன்