
கோலா கங்சார் , மே 26: கோலா கங்சார் புக்கிட் சந்தான் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில், 50 வயதுடைய ஆண் ஒருவர் இன்று பிற்பகல் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) உதவி இயக்குநர் சபரோஸி நோர் அகமட் வெளியிட்ட அறிக்கையில், குறித்த சம்பவம் குறித்து 12:04 மணிக்கு குடும்ப உறுப்பினர் ஒருவர் தகவல் வழங்கினார் எனத் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட நபர் தனியாகவே வாழ்ந்தவர் என்பதையும், வீட்டு கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்ட நிலையில் இருந்ததையும் போலீசார் தெரிவித்தனர். எங்கள் குழுவினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி கதவை திறந்து நுழைந்து, உடலை புலனாய்வின் அடிப்படையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர்,” என்றார்.
உடல், மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவம் சுற்றுவட்டார மக்களிடையே சோகத்தையும், தனித்து வாழும் நபர்களின் நலன் குறித்து சிந்திப்பதற்கான தேவைையும் எழுப்பியுள்ளது.
-யாழினி வீரா



