Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

ASEAN25: தாய்லாந்து ராணி மறைவு: மலேசியா வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்தார்

கோலாலம்பூர், 25 அக். – தாய்லாந்தின் முன்னாள் பெர்மேசுரி சிரிகித் அவர்கள் காலமானதையடுத்து, மலேசியா வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசன் அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ASEAN உச்சிமாநாட்டின் தொடக்க விழா நிகழ்வில் அவர் உரையாற்றியபோது, “தாய்லாந்து அரசு மற்றும் மக்களிடம் மலேசியா சார்பாக இதயம் கனிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெர்மேசுரி சிரிகித் அவர்கள் சமூக சேவைக்கும், மனிதநேய பணிகளுக்கும் தாய்லாந்து வரலாற்றில் மறக்க முடியாத பங்களிப்பைச் செய்தவர்,” எனக் கூறினார்.

தாய்லாந்து அரச மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 93 வயதான பெர்மேசுரி சிரிகித் அவர்கள் பாங்காக் நகரில் உள்ள கிங் சுலாலோங்கார்ன் நினைவு மருத்துவமனையில் நேற்று மாலை 9.21 மணியளவில் மறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசியா மற்றும் தாய்லாந்து இடையிலான நெருங்கிய நட்பு உறவு, பிராந்திய ஒற்றுமைக்கு அடிப்படையாக தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

-யாழினி வீரா

Scroll to Top