Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

‘Ismail Sabri’ வசம் இருந்த ‘RM169’ மில்லியனுக்கும் மேற்பட்ட ரொக்கப் பணம், (SPRM) ஆல் பறிமுதல் செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அரசின் சொத்தாகியது.

Picture: Awani

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் ‘Menteri Datuk Seri Ismail Sabri Yaakob-பின் சொந்தமானதாகக் கருதப்படும் RM169 மில்லியன் ரிங்கிட் பணம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், (SPRM) பறிமுதல் செய்து, இன்று அதிகாரப்பூர்வமாக மலேசிய அரசின் சொத்தாக அறிவிக்கப்பட்டது.

‘Hakim Mahkamah Sesyen Suzana Hussin’, மூன்றாம் தரப்பிலிருந்து எந்தக் கோரிக்கையும் வராததால், அரசின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். ‘Ismail Sabri’ மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர் ‘Datuk Mohammad Anuar’ ஆகியோர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

மொத்தமாக RM14.7 juta, SG$6.1 juta, USD1.4 juta, CHF3 juta, EUR12.1 juta, JPY363 juta, GBP50,250, NZ$44,600, AED34.7 juta மற்றும் AUD352,850 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனுடன், ’16 kilogram’ தூய தங்க கட்டிகளும் (சுமார் RM7 juta மதிப்பில்) பறிமுதல் செய்யப்பட்டன.

இது ஊழல் மற்றும் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாகும்.

Scroll to Top