Tazhal Media – தழல் மீடியா

/ Jun 08, 2026
Latest News
tms

கொழுந்துவிட்டு எரியும் சிங்கப்பூர் கப்பல்; கடலில் விழுந்த கொள்கலன்களால் சிக்கல்

படம்: ஊடகம்

கொழிக்கோடு, 11 ஜூன்: கேரளக் கடற்பகுதியில் ஜூன் 9ஆம் தேதி தீப்பற்றிய சிங்கப்பூர் சரக்குக் கப்பல் எம்வி வான் ஹாய் 503 கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. கப்பலிலிருந்த 22 பணியாளர்களில் 18 பேர் இந்தியக் கடற்படையால் மீட்கப்பட்டனர். காயமடைந்த ஆறுபேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீவிபத்துக்கு காரணமாக, தீயில் எளிதாக எரியும் நச்சுத்தன்மை கொண்ட பொருள்கள் கப்பலில் இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. 268 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பலில் இருந்து இதுவரை 25 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளன. அவை திருச்சூர், எர்ணாகுளம் கடற்கரையை நோக்கி நகரலாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்புப் பணியில் ஏழு கப்பல்கள், ஐந்து டோர்னியர் விமானங்கள், INS சுஜாதா, சமர்த் போன்ற கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வெடிச்சத்தத்துடன் சாய்ந்து காணப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சிங்கப்பூர் துறைமுக ஆணையமும் இந்திய அதிகாரிகளும் இணைந்து கண்காணித்து வருகின்றனர்.

-ஸ்ரீதரன்

Scroll to Top