Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

திடீர் வெள்ளத்தில் சிக்கிய ஆடவர்; தேடும் பணிகள் தீவிரம்!

கோலாலம்பூர், 17 நவ. – கோலாலம்பூர் பகுதியில், Pintasan Saloma அருகே மதியம் சுமார் 5.40 மணியளவில் கனமழையின் காரணமாக ஏற்படட திடீர் வெள்ளத்தில் இந்திய ஆடவர் அடித்துச் செல்லப்படடார். சம்பவத்துக்குப் பின் போலீஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி (Bomba) உடனடியாக செயல்பட்டு, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.

மீட்பு பணியில் 13 பேர் ஈடுபட்டனர், இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். காணாமல் போயிருக்கும் நபர் இந்தியர் என்றும் அவர் ஓட்டிய வாகனம் Pajero வகை என்றும் போலீஸ் தெரிவித்தனர். மீட்பு குழுக்கள் தொடர்ந்து வலுவான தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள் பொதுமக்களுக்கு, திடீர் வெள்ளம் மற்றும் அபாயமான பாதைகளில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். மக்கள் சந்தேகமான சூழ்நிலைகளை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். நபரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-யாழினி வீரா

Scroll to Top