Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் தமிழ்ப்படம் – படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் தமிழ்த் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான தயாரிப்புப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியிருக்க, நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.

அவரது தந்தை அரசியல் களத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு வரும் நிலையில், ஜேசன் சஞ்சயின் திரைப்பட இயக்கத்தில் முதற்கட்ட முயற்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Scroll to Top