
படம் : கூகுள்
சென்னை, 4 ஏப்ரல்- ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டு தேதி முடிவாகாமல் இருந்தது. தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். விரைவில் டீசர், ட்ரெய்லர் என படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது படக்குழு. இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, செளபின் சாகீர், உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். “சவுண்ட ஏத்து!” பாடல் இளைஞர்களின் பிரியமாக திகழ்ந்து வருகிறது.
-ஶ்ரீஷா கங்காதரன்