
கோலாலம்பூர், ஏப்ரல் 17 – சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பும், வசதிகளும் கருதி, மேலும் புதிய நிர்வாகம் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக கோலாலம்பூர் கோபுரம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் உயரமான தொலைத்தொடர்பு கோபுரங்களில் ஒன்றான இந்த கோபுரம் மீண்டும் திறக்கும் தேதி பின்னர் ஊடக வழிகளில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
“மதானி அரசாங்கத்தின் கீழ், கோலாலம்பூர் கோபுரம் அரசு சொத்தாகும் என்பதை இம்மூலம் வலியுறுத்துகிறோம். 2025 ஏப்ரல் 1 முதல், LSH Service Master Sdn Bhd (LSHSM) நிறுவனமே கோபுரத்தின் நிர்வாக, பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது,” என அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-வீரா இளங்கோவன்