Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

மலேசியாவில் ராம்குமார் லைவ் – நகைச்சுவை நிறைந்த புதுவித அனுபவம்!

Picture: Veera Elanggovan

பெட்டாலிங் ஜெயா, 9 பிப்ரவரி — நேற்று பெட்டாலிங் ஜெயா பி.எ.சி. அரங்கில் நடைபெற்ற “RAMKUMAR LIVE IN MALAYSIA” நிகழ்ச்சியை நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது! மலேசியாவில் தமிழ் நகைச்சுவை என்றால் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது, அதிலும் தனக்கே உரித்தான பணியில் மேடை நகைச்சுவைக்கு பேர்போன ராம்குமார் வழங்கிய தமிழ் நகைச்சுவை வந்திருந்திருந்தவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

MOJO PROJECTS வழங்கிய Alt-Tab – Life of Ram என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ராம்குமார் அவர்கள் கடந்தகால தற்கால வாழ்க்கையின் மாறுதல்கள், தொழில்நுட்பத்தின் தாக்கம், பணியிட அனுபவங்கள், மற்றும் குடும்ப நிகழ்வுகள் ஆகியவற்றை நகைச்சுவை கோணத்தில் பரிமாறினார். சிறுவர்கள் முதல் மூத்தவர்கள் வரை அனைவரும் சிரிக்க அரங்கமே அதிர்ந்தது! நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பிரவீனா ரகுநாதன் அவர்களின் நகைச்சுவையும் இடம்பெற்றது. தனது வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை நகைச்சுவை பாணியில் சொன்னது வந்திருந்த ரசிகர்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தியது. மலேசியர்கள் மட்டுமின்றி தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவிற்கு வந்து வேலை செய்யும் தமிழர்களும் கலந்துக்கொண்டனர்.

இந்த மறக்கமுடியா அனுபவத்தை வழங்கிய MOJO PROJECTS குழுவிற்கு வருகையாளர்கள் தங்களது மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொண்டனர்! இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும் மேலும் இதுபோன்ற நிகழ்சிகள் நகைச்சுவை காதலர்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது இருக்கும் என தழல் மீடியாவிடம் தெரிவித்தனர்!

-வீரா இளங்கோவன்

படங்கள் : DryHub Media

Scroll to Top