
கிள்ளான், 3 பிப்ரவரி — கிள்ளான் லிட்டில் இந்தியாவில் ஆர்ஷேன் கலேக்க்ஷன் (RSYEN Collection) எனும் புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்கன் கடை நேற்று சிறப்பாக திறப்புவிழா கண்டது. ஜாலான் யெஒ குவான் ஹாப் (Jalan Yeo Guan Hup) பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய கடையின் தொடக்க விழாவில் 200-க்கும் மேற்பட்ட பேர் கலந்து கொண்டனர். அவர்களில் “கார சாரம்” உணவகத்தின் உரிமையாளர் திரு. ஸ்ரீதரன், தொழில் அதிர்பர்கள், தலைவர்கள், சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் பலர் வருகையளித்திருந்தினர். இவர்களுடன் மக்கள் கலைஞர் கவிமாறனும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
RSYEN Collection ஆடைகள், அணிகலன்கள் மற்றும் இந்திய பாரம்பரிய அணிவகுப்புகளுக்கு சிறப்பாகவும் பிரத்தியேகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சேலைகள், குர்திகள், உடைகள், டெய்லரிங், டிசைனர் கிளச்சுகள், மோஜரி காலணிகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளும் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு அங்கேயே தையல் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வு கலந்துகொண்ட விருந்தினர்கள் RSYEN Collection வழங்கும் புதுமையான கலெக்ஷன்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடியில் விற்பனைச் செய்யபட்டது. இதனிடையே மக்கள் கலைஞர் கவிமாறன் இதனை பாராட்டி, பாரம்பரிய பார்வையில் நவீன நுட்பங்களை இணைத்துள்ளதற்காக RSYEN Collection குழுவினரை பாராட்டினார். மேலும் நமது இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்கள் வர்த்தக துறையில் துவண்டு போகாமல் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு விஸ்வரூப வெற்றி அடைய வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
-வீரா இளங்கோவன்