
கோலாலம்பூர், 31 ஜனவரி — உலகளவில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி (LG), தனது புதிய ஃபிளாக்ஷிப் சவுண்ட்பார் மாடல்களான LG S95TR மற்றும் S90TY ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சவுண்ட்பார்கள் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ தொழில்நுட்பம், வயர்லெஸ் ரியர் சரவுண்ட் ஸ்பீக்கர் மற்றும் 3D ஸ்பேஷியல் சவுண்ட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளன.
நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய மாடல்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், AI ரூம் கேலிப்ரேஷன் எனப்படும் புதிய தொழில்நுட்பம் அறையின் அமைப்புக்கு ஏற்ப ஆடியோவை தானாக மெருகூட்டும் வசதியை வழங்குகிறது.
மலேசியாவில் LG S95TR, S90TY விலை மற்றும் வெளியீடு
மலேசிய சந்தையில் LG S90TY சவுண்ட்பார் MYR 3,950 விலையிலும், LG S95TR சவுண்ட்பார் MYR 5,650 விலையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு LG S95TR சிறப்பு விலையாக MYR 4,800க்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாடல்களும் எல்ஜியின் அதிகாரப்பூர்வ இணையதளம், லாஸாடா, ஷோப்பி மற்றும் பிற ஆன்லைன், ஆஃப்லைன் தளங்களில் தொடங்கும்.
மேம்பட்ட ஆடியோ அனுபவம் மற்றும் cutting-edge தொழில்நுட்ப அம்சங்களுடன், எல்ஜியின் புதிய சவுண்ட்பார்கள், மலேசியாவின் ஆடியோ பிரியர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
-யாழினி வீரா