
பெட்டாலிங் ஜெயா, 6 பிப்ரவரி –பல நாள் காத்திருப்புக்குப் பிறகு இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியீடு கண்ட விடாமுயற்சி திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மலேசியாவில் விடாமுயற்சி திரைப்படத்தை 3 டாட் மூவிஸ் வெளியீடு செய்கின்றனர். சோசியல் கல்பிரிட்ஸ் மற்றும் மலேசிய தல ரசிகர்கள் மன்றம் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு வான வேடிக்கை ஆட்டம் பாட்டம் என மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்தில் மலேசிய விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

மலேசிய விஜய் ரசிகர்களும் அஜித் குமார் ரசிகர்களும் ஒன்று சேர கொண்டாடிய இந்த நிகழ்வு பார்ப்பவர்களையும் ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

