
PICTURE:AWANI
சுபாங் ஜெயா 1 ஏப்ரல் : இன்று காலை 10.35 மணி நிலவரப்படி, சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸ், புத்ரா ஹார்மோனி சாலையில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் சிக்கிய 25 பேர் அருகிலுள்ள கோவிலில் ஆரம்ப சிகிச்சை பெற்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் மேற்கொண்ட பார்வையில், உடலுக்கு தீக்காயம், சுவாசக் குறைபாடு போன்ற பாதிப்புகளுடன் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி சிகிச்சை வழங்குவதில் சுகாதார அமைச்சு (KKM) பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதை கண்டறிந்தனர்.
தீவிபத்தில் ஐந்து பேர் மேலும் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மலேசிய தீயணைப்புத் துறையின் (JBPM) செலாங்கூர் மாநில பணியகம், செயல்பாட்டு உதவி இயக்குநர் அக்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்ததாவது, இந்த சம்பவம் தொடர்பாக காலை 8.10 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து, தீ அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சில வீடுகளும் இந்த தீவிபத்தில் எரிந்து சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார்.
-முல்லை மலர் பொன் மலர் சோழன்