Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

பினாங்கு தீவில் மாணவர்களுக்கு கல்வி உதவி!

Picture: Mr. Mesh

பினாங்கு தீவு, 3 பிப்ரவரி — Pertubuhan Lima Generasi Pulau Pinang எனப்படும் பினாங்கு தீவு ஐந்து தலைமுறை அமைப்பு, பினாங்கு தீவு நகராண்மை கழகம் (MBPP) மற்றும் புக்கிட் ஜம்போல் மைதீன் பேரங்காடிக் கிளை இணைந்து “கல்விக்கு திரும்புதல்” (Program Kembali ke Sekolah) எனும் நிகழ்வு வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்வில் பினாங்கில் உள்ள வசதிகுறைந்த 50 மாணவர்களுக்கு கல்வி உதவியாக RM100 மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் பள்ளிச்சேவையை வசதியாக்க உதவியுள்ளது.

இந்த நிகழ்வு, அரசாங்கம், தனியார் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் (NGO) சிறப்பான கூட்டணி மூலம் கல்வி அணுகுமுறையை மேம்படுத்துவதில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. பினாங்கு தீவு நகராண்மை கழக உறுப்பினர் திரு. கைருல் பின் முகமது அலி திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கினார்.

புக்கிட் ஜம்போல் மைதீன் பேரங்காடிக் கிளை இயக்குநர் திரு. அஸ்மின், சமூகத்திற்கான மைதீன் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி, “ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்விக்கான சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த உதவியை பெறுவதற்கான மாணவர் தேர்வு நடைமுறையை பினாங்கு தீவு ஐந்து தலைமுறை அமைப்பின் தலைவர், டத்தோ முகமது இஸ்மாயில் முறையாக மேற்கொண்டார். குடும்ப வருமான நிலை, குழந்தைகளின் கல்வித் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

-வீரா இளங்கோவன்

Scroll to Top