
கோலாலம்பூர், 4 ஏப்ரல்: கோலாலம்பூர்-கராக் நெடுஞ்சாலையில் உள்ள செந்துல் நிலைப்பங்குச் சாவடியில் புதன்கிழமை போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது, ஒரு இந்திய குடியரசு நாட்டைச் சேர்ந்த லோரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இவர், சுங்கவரி செலுத்தப்படாத மதுபானக் குடிகளை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறார்.
கோலாலம்பூர் JPJ இயக்குநர் ஹமிடி ஆடம் கூறுகையில், “ஹரி ராயா (HRA) 2025 சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது இந்த லோரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின்போது, 2,612 மதுபானக் குடிகள் கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான மதிப்பீட்டில், சுமார் RM71,351.28 வரி பாக்கியுள்ளதாக தெரிந்தது,” என தெரிவித்தார்.
மேலும், விசாரணையில் குறித்த லோரி டிரைவருக்கு சரியான ஓட்டுநர் உரிமமும் (GDL) இல்லை. மேலும், வாகன பரிசோதனை சான்றிதழும் (PUSPAKOM) மற்றும் மோட்டார் வாகன உரிமமும் (LKM) காலாவதியாகியிருந்தது. மேலும், அவர் 33.6% அதிக எடையை அனுமதியற்ற விதமாக கடத்தியதும் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பயன்படுத்திய பாஸ்போர்டும், சமூக விஜய பாஸும் (PLS) காலாவதியாக இருப்பது தெரியவந்தது. இதனால், JPJ அதிகாரிகள் லோரியை பறிமுதல் செய்து, இதுதொடர்பான மேலதிக நடவடிக்கைக்காக மலேசிய சுங்கத் துறைக்கு (JKDM) வழியனுப்பியுள்ளனர்.
-யாழினி வீரா