
கோலாலம்பூர், 8 ஏப்ரல்: சமூக ஊடகத்தில் 57 வயதுடைய நபர் , கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) அதிகாரிகளுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் மிரட்டல் செய்தி பகிர்ந்ததால் போலீசாரால் கைது செய்துசெய்யப்பட்டார் .
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ரூஸ்டி முகமட் ஈசா தெரிவித்ததாவது, DBKL அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் கைது செய்யப்பட்டார் என கூறினார்.
முதல்கட்ட விசாரணையில், ஒரு வாட்ஸ்அப் குழுவில் நடந்த உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அது பேஸ்புக்கில் பரவி, அதில் DBKL அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டும், தூண்டுவிப்பு உள்ளடக்கிய கருத்துகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
“அந்த உரையில், சட்ட அமலாக்க பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை பயமுறுத்தும் விதமான தீங்கிழைக்கும் நோக்கம் கொண்ட வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன,” என்றார் ரூஸ்டி.
இந்த வழக்கு, மெய்யான அபாயத்துடன் கூடிய மிரட்டல் (குற்றவியல் சட்டம் பிரிவு 506), பொது அமைதிக்கு அபாயம் ஏற்படுத்தும் கருத்துகள் (பிரிவு 505(b), மற்றும் இணையதளத்தை தவறாக பயன்படுத்தல் (தொலைத்தொடர்பு மற்றும் மல்டீமீடியா சட்டம் பிரிவு 233) என மூன்று பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளுக்கு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் அல்லது நச்சு கருத்துகள் பகிரும் செயல் தண்டனைக்குரியது என்றும் போலீசார் வலியுறுத்தினர்.
-யாழினி வீரா