Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

இந்தியப் பெண்கள் தொழில் முன்னேற்றத்திற்கு சைலஜா செல்வீக்கம் ஓர் உதாரணம்!

படம்: சைலஜா

நமது பெண்கள் தொழிலில் வெற்றி பெறுவது கடினம் என்ற பார்வை தற்போது மாறிவருகிறது. சமூகவலைத்தளங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்தி, பலர் தங்களின் சொந்த வியாபாரத்தைக் கட்டியெழுப்பி, வெற்றி நடைபோடுகிறார்கள். இந்த மாற்றத்திற்கான பிரதான உதாரணம் சைலஜா செல்வீக்கம் என்பவரே.

2013ல் ஆன்லைன் விற்பனையை தொடங்கிய அவர், தற்போது ஒரு நிறுவனத்தின் தலைமை இயக்குநராக, 2022ல் மட்டும் RM8.7 மில்லியன் விற்பனை சாதனை படைத்துள்ளார். அவரது நிறுவனம் 10,000க்கு மேற்பட்ட முகவர்களையும் விற்பனை பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது.

அண்மையில் அளித்துள்ள நேர்காணலில் “என் இலக்கு 1,000 பெண்களை கோடீஸ்வரர்களாக உருவாக்குவது” என அவர் தெரிவிக்கிறார். இதற்காக வாரந்தோறும் இலவச பயிற்சிகளை வழங்கி, பல பெண்களை தொழில் முனைவோராக ஊக்கப்படுத்திவருகிறார்.

அவரது முயற்சிகள் பல பெண்களுக்கு நிதி சுதந்திரம் கிடைக்க வழிவகுத்துள்ளன. அதில் பலர் தங்கள் குடும்பத்தையும் நன்றாக பராமரிக்க தொடங்கி குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மேலும், அவர்கள் சொந்த வீடுகளும் கார்களும் வாங்கியுள்ளனர்.

சிலர் கல்வி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், விற்பனை திறன் மூலம் லட்சக்கணக்கான வருமானம் ஈட்டியுள்ளனர். “ஒருவர் மூன்று வருடங்களாக வருடத்திற்கு RM1 மில்லியன் விற்பனை செய்துள்ளார்”, என அவர் பெருமிதத்துடன் கூறுகிறார்.

B40 மற்றும் M40 வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தொழில் வளர்ச்சியில் உதவுவதற்காக, கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் (KLSICCI) தலைவர்நிவாஸ் ராகவன், தொழிலாளர்களுக்கு வழிகாட்டுகிறார். “சிறுதொழில் வணிகங்களை அரசு உதவித்திட்டங்கள் பெறும் வகையில் பதிவுசெய்ய வேண்டும்” என்றும், “திறமைமிக்க பெண்களுக்கு நாங்கள் வழிகாட்ட தயாராக உள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பெண்கள், சமூக ஊடகத்தினைப் பயன்படுத்தி தொழில் முன்னேற்றம் அடைய முடியும் என்பதற்கு சைலஜா செல்வீக்கம் ஒரு சிறந்த உதாரணம்! வர்த்தகத்தில் மென்மேலும் உயர்ந்து பல சாதனைகளை படைக்க தழல் மீடியா சார்பாக வாழ்த்துகிறோம்!

-வீரா இளங்கோவன்

Scroll to Top