Tazhal Media – தழல் மீடியா

/ Mar 16, 2025
Latest News
tms

மருத்துவப் பரிசோதனைக்குப் பின் வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்…

படம் : கூகுள்

சென்னை, 16 மார்ச்-  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.

இதற்கிடையில் முதல்வர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இசைப்புயல் ஏ.ஆர்,ரஹ்மான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர், மகிழ்ச்சி.” என்று தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து ரஹ்மானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம்விரும்பிகளுக்கு அவர்களின் அன்பு பிரார்த்தனை மற்றும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியின்னைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தந்தை நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பலவீனமாக இருந்தார். வஅதனால் நாங்கள் வழக்கமான சில பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் இப்போது நலமாக உள்ளார் என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்களின் அக்கரையையும் ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.” என்று தெரிவித்துள்ளார். பரிசோதனைகள் முடிவந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top