




ஜாலான் செராஸ் முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கமும் மற்றும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர் சங்கமும் ( PERTAMA ) கூட்டு முயற்சியாக அறிமுகம் செய்யும் “வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்” திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாசிக்கும் பழக்கத்தை நேசிக்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.
“வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்” திட்டமானது, தமிழ் பள்ளி மாணவர்களின் வாசிப்பின் மீது ஆர்வத்தை உருவாக்கும் ஒரு சிறப்பு முயற்சியாகும்.
“நித்திரைக் கதைகள்” என்பது சிறுவர்களுக்காக இரவு நேரத்தில் படிக்க, அழகாக எழுதப்பட்ட 61 கதைகள் கொண்ட 10 தொகுப்புகள் கொண்ட புத்தகமாகும். அழகான வடிவமைப்போடு உருவாகும் இக்கதை புத்தகம் சிறுவர்களுக்கு தமிழ் மொழியில் ஒரு வித்தியாசமான மற்றும் அருமையான வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என்பது நிச்சயம்.
இந்த முயற்சியில் தமிழ் மக்களையும், தமிழ் மொழியை நேசிப்பவர்களையும்,முன்னால் தமிழ்ப் பள்ளி மாணவர்களையும், நன்கொடையாளர்களையும் எங்களுடன் இணைந்து பயணிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
எங்களது இலக்கு, இந்த “நித்திரைக் கதைகள்” புத்தகத் தொகுப்பை நாடு முழுவதும் உள்ள 530 தமிழ் பள்ளிகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான்.
தமிழை வாசிப்பதோடு அதன் பெருமையையும் பண்பாட்டையும் உணரும் மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம். கற்பனை மற்றும் மாயாஜால கதைகள் மூலம் தமிழ் எழுத்தாற்றலை வளர்க்கும் இந்தப் பயணத்தில் நீங்களும் இணையுங்கள். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை நன்கொடை செய்யுங்கள் அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துங்கள். நீங்கள் விரும்பிய தொகையில் புத்தகம் நன்கொடை செய்ய கீழேயுள்ள Link-கை கிளிக் செய்யவும்.
https://app.senangpay.my/payment/174542645899
Or you may contact Mr.Parthiban at 017-6834685 for further information.
Visit ‘Dimension Book’ FB page more info.