Tazhal Media – தழல் மீடியா

/ Mar 15, 2025
Latest News
tms

தொடர் ஏற்றங்களுக்கு இடையே சற்று ஓய்வில் தங்கத்தின் விலை:

படம் : கூகுள்

சென்னை, 12 பிப்ரவரி- தொடர்ந்து விலையுயர்வு கண்டு, வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு நகை வாங்குவோரை அச்சத்தில் ஆழ்த்திய தங்கம் விலை இன்று (பிப்.12) சற்றே ஆறுதல் தரும் வகையில் பவுனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.

இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.7,940-க்கும், பவுனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் ரூ.63,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. இதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,060-க்கும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் ரூ.64,480-க்கும் விற்பனையானது. இதன் மூலம், தங்கம் விலை ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.70,336-க்கு விற்பனையானது.

-ஶ்ரீஷா கங்காதரன்

Scroll to Top