Tazhal Media – தழல் மீடியா

/ Mar 21, 2025
Latest News
tms

திங்கள்கிழமை முதல் 90 மலேசியர்கள் STR உதவித்தொகை பெறுவர்.

Picture: Google

கிட்டத்தட்ட 9 மில்லியன் தகுதியான பெறுநர்களுக்கு STR எனப்படும் இரண்டாம் கட்ட உதவி வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த உதவிக்கு மொத்தமாக RM1.7 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட RM1.5 பில்லியனை விட அதிகமாகும். “மலேசியாவின் 60% குடிமக்கள் அதிகபட்சம் RM650 வரை பெறுவார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சராகவும் இருக்கும் அவர், உள்ளடக்கப்பட்ட மற்றும் புதிய பெறுநர்கள் அரசின் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின், அவர்களின் தகுதிப் பிரிவுகளின்படி நேரடியாக வங்கிக் கணக்கில் அல்லது தேசிய வங்கி மூலம் பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

“மக்களின் வாழ்க்கைச் செலவுப் பாரத்தை குறைக்கும் நோக்கில், குறிப்பாக நோன்பு பெருநாளை முன்னிட்டு, அரசு இந்த முயற்சிகளை மேற்கொள்கிறது. STR மற்றும் Sumbangan Asas Rahmah (SARA) உதவிகள் 2025-ஆம் ஆண்டில் 30% அதிகரித்து RM13 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளன,” என்று அன்வார் விளக்கினார்.

-யாழினி வீரா

Scroll to Top