Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

அடிப்படை உணவுப் பொருட்களுக்கு 5% விற்பனை வரி விதிக்கப்படாது – நிதியமைச்சு தெளிவு

    பெட்டாலிங் ஜெயா, 11 ஜூன் : விரிவாக்கப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரி (SST) திட்டத்தின் கீழ், இறக்குமதி செய்யப்பட்ட சில அடிப்படை உணவுப் பொருட்கள் மற்றும் உள்ளூர் பழங்களுக்கு 5% விற்பனை வரி விதிக்கப்படாது என நிதியமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

    நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள இரு அரசாங்க ஆணைகள், 2025ஆம் ஆண்டுக்கான “விற்பனை வரிவிலக்கு பெறும் பொருட்கள்” பட்டியல் மற்றும் “5% விற்பனை வரி விதிக்கப்படும் பொருட்கள்” பட்டியல் ஆகியவை அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

    இரண்டு பட்டியலிலும் சேர்க்கப்படாத பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும். இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, கோதுமை, சர்க்கரை, உப்பு மற்றும் இறைச்சி போன்ற அடிப்படை உணவுப் பொருட்கள் இந்த வரியிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. மேலும், உள்ளூரிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்படும் சமையல் பனை எண்ணெய் சம்பந்தமாகவும் வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மஞ்சள் சர்க்கரைக்கு 5% வரி விதிக்கப்படும் ஆனால் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு 0% வரி வீதம் தொடரப்படும்.

    வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல், முக்கியமல்லாத பொருட்களுக்கு 5% முதல் 10% வரை SST விதிக்கப்படும்.

    மேலும், வீட்டு வாடகை, கட்டிடம், நிதிச் சேவைகள், தனியார் சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகள் போன்றவற்றும் சேவை வரிக்குள் அடக்கம் செய்யப்படும் என நிதி துணை அமைச்சர் அமீர் ஹம்சா அறிவித்துள்ளார். எனினும், இருமுறை வரி வசூலைத் தவிர்க்கும் வகையில் சில சேவைகளுக்கு விலக்குகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    -யாழினி வீரா

    Scroll to Top