Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த மோதலுக்கு தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர் – போலீஸ்

Picture: Bernama

கோலாலம்பூர், ஜூன் 1: கடந்த ஜும்மா அன்று டத்தாரான் மெர்டேக்கா பகுதியில் நடந்ததாக நம்பப்படும் குழுக்களின் மோதல் சம்பவம் சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலர் மீது சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், குறித்த சந்தேகப்படுத்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சம்பவம் குறித்து பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பரவிய நிலையில், இது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் சரியான நேரம், காரணம் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து மேலும் தகவல் சேகரிக்க காவல்துறையினர் விசாரணைகளை விரைவுபடுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் அமைதியுடன் இருந்து, சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இனவாதத்தையோ குழுவாரியான துன்புறுத்தலையோ தூண்டும் வகையில் எந்தவொரு கருத்துகளையும் பரப்ப வேண்டாம் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

-யாழினி வீரா

Scroll to Top