
Picture : Awani
Kuala Lumpur, 21 April 2026 – உலகளாவிய சவால்கள் அதிகரித்தாலும், மலேசியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக இருந்து வருவதாகவும், உலகத்திற்கு தேவையான முக்கிய உற்பத்திகளை வழங்கும் நாடாக முதலீட்டாளர்கள் மலேசியாவை பார்க்கின்றனர் என்றும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 5.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்ததுடன், வரலாற்றிலேயே அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது மலேசியாவின் பொருளாதார அடித்தளம் உறுதியாக இருப்பதற்கான முக்கிய சான்றாகும் என அவர் வலியுறுத்தினார். “மலேசியா உலக சந்தையில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்கிறது என்பதே முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், செமிகண்டக்டர் மற்றும் aeroangkasa போன்ற முக்கிய துறைகள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து வருகின்றன என்றும், மலேசிய நிறுவனங்கள் உலகளாவிய வழங்கல் சங்கிலியில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, விமானங்களுக்கான இறக்கை அமைப்புகள், உயர் துல்லிய இயந்திர கூறுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படும் சிப் உற்பத்தி போன்ற துறைகளில் உள்ளூர் நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் தொடர்ந்து கொள்கை ஒழுங்கை பேணுவதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்ய ஒப்பந்தங்கள் மற்றும் அறிவுசார் சொத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். மொத்தத்தில், மலேசியா உலக பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் திறன் கொண்ட நாடாக தொடர்ந்து முன்னேறி வருவதாக பிரதமர் அன்வர் வலியுறுத்தினார்.



