
Picture : Awani
KUALA LUMPUR, 18 மே 2026: பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, Sabah மாநிலத்தின் Pulau Banggi பகுதியில் வசிக்கும் சிறுவன் “Nanang” எழுதிய கடிதத்திற்கு பதில் அளிப்பதாக அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
எட்டு வயதான Syam Aariz Rayyan Abdullah எனும் நனாங், அண்மையில் பிரதமரை சந்தித்த போது தனது கனவுகள் மற்றும் எதிர்கால ஆசைகள் குறித்து கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார். அந்தக் கடிதம் பிரதமரின் கவனத்தை ஈர்த்ததுடன், அதற்கு நேரடியாக பதில் அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், Anwar Ibrahim தனது குழுவினரை நனாங் வீட்டிற்கு அனுப்பி, அவருக்கான பதில் கடிதத்தையும் இரண்டு புத்தகங்களையும் வழங்கியுள்ளார். கல்வி மற்றும் அறிவின் மூலம் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற பெரிய கனவுகள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள குழந்தைகளிடம் இருப்பதை இந்தக் கடிதம் நினைவூட்டுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், நனாங் தொடர்ந்து கல்வியை நேசிக்க வேண்டும், பெற்றோருக்கு மரியாதை செலுத்த வேண்டும் மற்றும் எந்த சூழ்நிலையிலும் கல்வியை கைவிடக்கூடாது என அவர் அறிவுரை வழங்கினார்.
அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட புத்தகங்கள், தொடர்ந்து வாசிக்கவும் சிந்திக்கவும் பெரிய கனவுகளை உருவாக்கவும் உதவும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. சிறுவனின் கனவுகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் எடுத்த இந்த நடவடிக்கை பலரின் மனதை நெகிழச்செய்துள்ளது.



