Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

மலேசிய எஸ்.எம்.இ. உலகில் புதிய அத்தியாயம் – ‘MASPEDIA 2026’ மெகா அறிமுகம்!

சிரம்பான், ஏப். – மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் சாதனைகள் மற்றும் வெற்றிக் கதைகளை வெளிப்படுத்தும் “MASPEDIA – SME தொழில் முனைவோர் வாழ்க்கை வரலாறு நூல் 2026” முதல் பதிப்பு, நெகிரி செம்பிலானின் கிளானா ரிசார்டில் சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நூலில் நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 50 தொழில் முனைவோரின் உண்மையான பயணங்கள் இடம் பெறுகின்றன. அவர்களின் உழைப்பு, முயற்சி மற்றும் வெற்றி கதைகள் மற்றவர்களுக்கு ஒரு புதிய ஊக்கமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இந்த முயற்சியை முன்னெடுத்த MASPEDIA நிறுவனர் YBrs. Tuan ஜெய்சந்திரன் கோபாலா, இது தொழில் வளர்ச்சிக்கு ஒரு வலுவான தளமாகவும், பல இன மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் அமையும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி JC Scope Marketing நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நெகிரி செம்பிலான் மாநில செயற்குழு உறுப்பினரான வீரபன் சுப்பிரமணியம் அவர்கள் இந்த நிகழ்வை சிறப்பாகத் திறந்து வைத்தார். தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள மேம்பாடு, காலநிலை மாற்றம், கூட்டுறவுகள் மற்றும் நுகர்வோர் தொடர்பான துறைகளை பொறுப்பேற்றுள்ள அவர், தனது உரையில் எஸ்.எம்.இ. துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த முதல் பதிப்பில் மொத்தம் 50 தொழில் முனைவோர் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால், MASPEDIA நூல் ஒரு தனித்துவமான மற்றும் பெருமைக்குரிய மேடையாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இதன் அடுத்த பதிப்புகளும் மேலும் பல தொழில் முனைவோரின் கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top