Tazhal Media – தழல் மீடியா

/ May 22, 2026
Latest News
tms

Hari Arafah ஒற்றுமைக்கு மட்டும் அல்ல, சவால்களை எதிர்கொள்ள நல்ல பண்பும் தேவை – PM Anwar

Picture : Awani

Kuala Lumpur, 22 மே 2026: Hari Arafah என்பது முஸ்லிம்களின் ஒற்றுமையை மட்டும் காட்டும் நாள் அல்ல, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நல்ல பண்புகளையும் உயர்ந்த மனிதநேய மதிப்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய நாளாகும் என்று பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

Wangsa Melawati பகுதியில் உள்ள Masjid Al-Muttaqin பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பிறகு, “Arafah Hari Kebangkitan” என்ற தலைப்பிலான khutbah-இல் கூறப்பட்ட முக்கிய செய்தியை தனது Facebook பதிவின் மூலம் Anwar பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், Hari Arafah அன்று நடைபெறும் பெரிய ஒன்று கூடல், உலக முஸ்லிம்களின் ஒற்றுமையை காட்டினாலும், அதைவிட முக்கியமாக சமுதாயத்தின் தரம், ஒழுக்கம் மற்றும் மனிதநேயத்தை உயர்த்த வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது என்றார்.

மேலும், ஹஜ் பயணத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மலேசிய haj pilgrims மற்றும் பணியாளர்களும் நல்ல உடல்நலத்துடன் இருந்து, முழு கவனத்துடன் ibadah haji-யை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.

Saudi Arabia அரசு அறிவித்தபடி, இந்த ஆண்டு Hari Arafah வரும் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை Hari Raya Aidiladha கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 31,600 மலேசியர்கள் ஹஜ் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

Scroll to Top