Tazhal Media – தழல் மீடியா

/ Mar 09, 2026
Latest News
tms

FlySiswa மானியம் விரிவாக்கம்; Bantuan Khas Kewangan 13 மார்ச் வழங்கப்படும் – PM Anwar

Picture : Awani

Putrajaya: மாணவர்களுக்கு வழங்கப்படும் FlySiswa விமான டிக்கெட் மானியம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் Anwar Ibrahim அறிவித்தார். இந்த திட்டம், குறிப்பாக Sabah மற்றும் Sarawak மாநிலங்களில் இருந்து Semenanjung Malaysia-க்கு பயணம் செய்யும் உயர்கல்வி மாணவர்களின் செலவுகளை குறைக்க உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு RM400 மதிப்புள்ள விமான டிக்கெட் மானியம் வழங்கப்படுகிறது. முன்பு இந்த திட்டம் பெரும்பாலும் institusi pengajian tinggi awam (IPTA) மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்டம் மேலும் பல கல்வி நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய விரிவாக்கத்தின் மூலம் Akademi Seni Budaya dan Warisan Kebangsaan (ASWARA), Institut Latihan Jabatan Tenaga Manusia, Institut Perladangan dan Komoditi, அரை அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த உதவியை பெற முடியும்.

இந்த திட்டம் மூலம் 2026ஆம் ஆண்டு சுமார் 50,000 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் 44,000 மாணவர்கள் மட்டுமே பயன் பெற்றனர் என்று Anwar தெரிவித்தார்.

இதற்கிடையில், அரசு Bantuan Khas Kewangan (BKK) என்ற சிறப்பு நிதி உதவியையும் அறிவித்துள்ளது. Gred 15 மற்றும் அதற்கு கீழ் உள்ள அரசு ஊழியர்கள், உட்பட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோர் அனைவருக்கும் RM500 வழங்கப்படும். மேலும், அரசு ஓய்வுபெற்றோர் மற்றும் ஓய்வூதியம் பெறாத முன்னாள் அரசு பணியாளர்களுக்கு RM250 வழங்கப்படும். இந்த உதவி 13 மார்ச் அன்று வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, KAFA ஆசிரியர்கள், takmir ஆசிரியர்கள், imam, bilal மற்றும் masjid பணியாளர்கள் உள்ளிட்ட 70,000க்கும் மேற்பட்டோர் கூட இந்த RM500 சிறப்பு உதவியை பெறுவார்கள் என்று பிரதமர் கூறினார்.

Scroll to Top