Tazhal Media – தழல் மீடியா

/ May 14, 2026
Latest News
tms

AFC மேலும் ஒரு அணிக்கு தண்டனை உறுதி

Picture : Awani

KUALA LUMPUR: Asia Football Confederation (AFC), Asia போட்டிகளில் விதிமுறைகள் மீறப்பட்டதை தொடர்ந்து மேலும் ஒரு கால்பந்து அணிக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த முறை Vietnam நாட்டைச் சேர்ந்த Cong An Ha Noi (CAHN) அணி, AFC Champions League Two (ACL2) தொடரில் வீரர் பதிவு தொடர்பான பிரச்சினை காரணமாக AFC-யின் தண்டனையை எதிர்கொண்டுள்ளது. தகவல்களின் படி, Singapore அணியான Tampines Rovers-க்கு எதிரான குழு நிலை போட்டியில் தகுதி இல்லாத வீரரை CAHN களமிறக்கியதாக கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து AFC இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

AFC வெளியிட்ட அறிக்கையில், வீரர் தகுதி விதிமுறைகளை அந்த அணி மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அபராதம் மற்றும் கூடுதல் ஒழுங்கு நடவடிக்கைகளும் CAHN மீது விதிக்கப்பட்டுள்ளன. எனினும், அந்த போட்டியின் முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. போட்டி வெற்றி தொடர்ந்து CAHN அணிக்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் Asia கால்பந்து ரசிகர்களிடையே மீண்டும் கவனம் பெற்றுள்ளது. போட்டி விதிமுறைகளை அனைத்து அணிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் AFC தற்போது மிகவும் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுகிறது என பார்க்கப்படுகிறது. முன்னதாகவும் பல அணிகள் மீது stadium பாதுகாப்பு பிரச்சினைகள், ரசிகர் ஒழுங்கீனம் மற்றும் தொழில்நுட்ப விதிமுறை மீறல்கள் தொடர்பாக AFC ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top