Tazhal Media – தழல் மீடியா

/ May 25, 2026
Latest News
tms

எண்ணெய் தள தொழிலாளர் உயிரிழப்பு சம்பவத்தை அரசு தீவிரமாகக் கவனிக்கிறது, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் – பிரதமர் அன்வார்

Picture : Awani

KUALA LUMPUR: Terengganu-Kelantan கடற்பகுதியில் உள்ள Sepat pelantar minyak பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக பிரதமர் Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதிப்படுத்தப்படும் வகையில் வேலை இட பாதுகாப்பு அம்சங்கள் மேலும் பலப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை நண்பகலில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தளத்தின் கீழ்பகுதியில் பராமரிப்பு பணிக்காக மீட்பு படகில் இறங்கிய தொழிலாளர்கள் பயணித்த போது, படகில் பொருத்தப்பட்டிருந்த கயிறு அல்லது கொக்கி திடீரென கழன்றதால் அவர்கள் கடலுக்குள் விழுந்தனர்.

இந்த விபத்தில் Ahmad Fikri Zakaria, Mohamad Faizuan Hakim Mohamad Bustamam மற்றும் Nik Mohamad Hafifi Azri Abdul Majid ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த பிரதமர், காயமடைந்த தொழிலாளர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.



Scroll to Top