Tazhal Media – தழல் மீடியா

/ Jul 17, 2026
Latest News
tms

JPN : MyKad மாற்றம் அவசரமாக செய்ய வேண்டாம் என அறிவுரை

Picture : Awani

KUALA LUMPUR: மக்கள் MyKad மாற்றத்தை அவசரமாக செய்ய வேண்டாம் என்று Jabatan Pendaftaran Negara (JPN) அறிவுறுத்தியுள்ளது. தற்போதுள்ள MyKad இன்னும் செல்லுபடியாகவே இருப்பதாகவும், அனைத்து அதிகாரப்பூர்வ வேலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

JPN கூறுகையில், புதிய MyKad வடிவம் அரசாங்கம் அறிவிக்கும் தேதியில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும். அதற்குப் பிறகு மட்டும் படிப்படியாக மாற்றும் நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்று செயல்முறை முதலில் சில JPN அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் நடைபெறும். பின்னர் முழு நாட்டுக்கும் விரிவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சேவை சீராக நடக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக JPN விளக்கியுள்ளது.

மேலும், தரவு பாதுகாப்பு மிக உயர்ந்த முறையில் பாதுகாக்கப்படும் என்றும், மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய MyKad தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் JPN அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Scroll to Top