Tazhal Media – தழல் மீடியா

/ May 14, 2026
Latest News
tms

Terbuka Thailand: Sze Fei-Izzuddin மட்டும் காலிறுதிக்கு முன்னேற்றம்

Picture : Awani

BANGKOK: Thailand Open 2026 badminton போட்டியில், Malaysia சார்பில் Goh Sze Fei – Nur Izzuddin Rumsani ஜோடி மட்டும் காலிறுதிக்கு முன்னேறிய ஒரே பிரதிநிதிகளாக உள்ளனர். உலக தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் இந்த professional beregu lelaki ஜோடி, China வீரர்களான Huang Di – Liu Yang அணியை 21-14, 24-22 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது. போட்டி 46 நிமிடங்கள் நடைபெற்றது.

முதல் செட்டில் தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த Sze Fei-Izzuddin, எளிதாக வெற்றி பெற்றனர். ஆனால் இரண்டாவது செட்டில் China அணி கடுமையான சவாலை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தாலும், Malaysia ஜோடி அமைதியாக விளையாடி தொடர்ந்து புள்ளிகள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது.

போட்டிக்குப் பிறகு Nur Izzuddin கூறியதாவது, அவர்கள் தற்போது நல்ல momentum-இல் இருப்பதாகவும், ஒவ்வொரு போட்டியிலும் தங்களின் செயல்திறன் மேம்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அழுத்தமான சூழலிலும் பொறுமையை இழக்காமல் விளையாடியது வெற்றிக்கான முக்கிய காரணம் என்றும் கூறினார்.

காலிறுதி போட்டியில் அவர்கள் Scotland நாட்டின் Christopher Grimley – Matthew Grimley ஜோடியை எதிர்கொள்ள உள்ளனர். வெற்றி பெற்றால் அரையிறுதியில் India ஜோடியான Satwiksairaj Rankireddy – Chirag Shetty அணியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் Malaysia-வின் மற்ற மூன்று beregu lelaki அணிகளும் இரண்டாம் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறின.

Scroll to Top