
Picture : Awani
KUALA LUMPUR, 21 மே 2026: Timbalan Perdana Menteri Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தொடர்பான Yayasan Akalbudi ஊழல் வழக்கில் “No Further Action” (NFA) என அறிவிக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து Malaysian Bar தாக்கல் செய்த நீதித்துறை மறுஆய்வு மனுவுக்கு Jabatan Peguam Negara (AGC) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் Kuala Lumpur உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, AGC சார்பில் ஆஜரான Peguam Kanan Persekutuan Nurhafizza Azizan, Malaysian Bar தாக்கல் செய்த மனுவை ஏற்கக்கூடாது என்று வாதிட்டார். Ahmad Zahid Hamidi மற்றும் Peguam Negara ஆகியோர் பதிலளிப்பாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த மனுவில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி வெளியிடப்பட்ட NFA முடிவு சட்டபூர்வமற்றது என்றும், அதிகார வரம்பை மீறியதாகவும் அறிவிக்க கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, Yayasan Akalbudi நிதி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று AGC அறிவித்திருந்தது. புதிய ஆதாரங்கள் மற்றும் விரிவான விசாரணைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் AGC தெரிவித்தது. SPRM மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் நிதியின் மூலம், பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் பெறப்பட்ட நடைமுறைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக Mahkamah Rayuan முன்பு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக Federal Court-ல் மேல்முறையீடு செய்ய AGC தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Ahmad Zahid தரப்பும் இதேபோன்ற மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக கூறியுள்ளது. இந்த வழக்கு மீதான அடுத்த தீர்ப்பை Kuala Lumpur உயர்நீதிமன்றம் வரும் 30 ஜூன் அன்று அறிவிக்க உள்ளது.



