
Picture : Awani
Kuala Lumpur, 22 மே 2026: நாட்டின் எரிசக்தி (tenaga) விநியோகம் தற்போது போதுமான அளவில் உள்ளது என்று பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதி அளித்துள்ளார். “Insya-Allah, cukup” என்று அவர் சுருக்கமாக தெரிவித்தார்.
Wangsa Maju பகுதியில் உள்ள Masjid Al-Muttaqin பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவு செய்த பிறகு ஊடகங்களை சந்தித்தபோது, நாட்டின் எரிசக்தி நிலைமை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தார். இதற்கு முன் துணைப் பிரதமரும் Menteri Peralihan Tenaga dan Transformasi Air அமைச்சருமான Datuk Seri Fadillah Yusof, உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி மற்றும் Asia Barat பகுதியில் நிலவும் மோதல்களின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் எரிசக்தி விநியோகத்தை இந்த ஆண்டு டிசம்பர் வரை நிலையாக வைத்திருக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
அவர் கூறுகையில், தற்போது நாட்டின் எரிசக்தி விநியோகம் குறைந்தது ஜூலை மாதம் வரை போதுமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து கூடுதல் வளங்களை பெற்றுவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. PETRONAS நிறுவனமும் தேவையான எரிசக்தி ஆதாரங்களை உறுதி செய்ய பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உலகளாவிய எரிசக்தி சந்தை மாற்றங்கள் காரணமாக விலை உயர்வு போன்ற சவால்கள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் அரசு கவனித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.



