
Picture : Awani
KUANTAN: Anwar Ibrahim தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்தை Istana Pahang கவனத்தில் கொண்டுள்ளதாக Tengku Mahkota Pahang, Tengku Hassanal Ibrahim Alam Shah தெரிவித்துள்ளார்.
Pahang மாநிலத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஒதுக்கீடு குறித்து சமமான பரிசீலனையும் நியாயமான அணுகுமுறையும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதனுடன், “Hutang emas boleh dibayar, hutang budi dibawa mati” என்ற பழமையான pantun ஒன்றையும் இணைத்து வெளியிட்டது கவனம் ஈர்த்துள்ளது.
முன்னதாக, பிரதமர் Anwar Ibrahim, Pahang மாநிலத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு சிறியதல்ல என்றும், அதன் முழுமையான விவரங்களை Menteri Kewangan II, Datuk Seri Amir Hamzah Azizan மூலம் Tengku Hassanal-க்கு விளக்கமாக வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
அதேவேளை, Pahang மாநிலத்திற்கு மொத்தம் RM3.386 billion மதிப்பிலான 133 புதிய திட்டங்களும் 434 தொடர்ச்சி திட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திட்டங்களில் தாமதம், வீணாக்கம் அல்லது முறைகேடு ஏற்படக்கூடாது என்றும் Tengku Hassanal வலியுறுத்தினார். மேலும், மணல் ஏற்றுமதி உள்ளிட்ட மாநில வருவாய் உயர்த்தும் முயற்சிகள் மத்திய அரசால் அனுமதிக்கப்படாதது குறித்து அவர் ஏமாற்றமும் வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



