Tazhal Media – தழல் மீடியா

/ May 20, 2026
Latest News
tms

Kerajaan Perpaduan கட்சிகள் ஆதரவு தொடரும் – Fahmi

Picture : Awani

PUTRAJAYA, 20 மே 2026: Kerajaan Perpaduan-இல் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தலைமையிலான அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி, ஆட்சிக்காலம் முடியும் வரை ஒன்றாக செயல்பட உறுதியளித்துள்ளதாக அரசு பேச்சாளர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்த உறுதிமொழி அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக Barisan Nasional (BN), Gabungan Rakyat Sabah (GRS) மற்றும் Gabungan Parti Sarawak (GPS) ஆகிய கட்சிகள் அரசாங்கத்துடன் தொடர்ந்து இருப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளன. மேலும், சமீபத்தில் பிரதமர் Anwar Ibrahim, முன்கூட்டியே பொதுத் தேர்தல் (PRU) நடத்தும் சாத்தியம் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தியதாக Fahmi தெரிவித்தார்.

இந்த ஒற்றுமை மக்களின் நலனுக்கும் நாட்டின் நிலைத்தன்மைக்கும் முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் கூறினார். குறிப்பாக Asia Barat பகுதியில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக உருவாகும் பொருளாதார சவால்களை சமாளிக்க அரசாங்கம் முழு கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், மக்களின் நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் Fahmi கூறினார்.

Scroll to Top