
Picture : Awani
Kuala Lumpur, 15 April 2026 – Petroliam Nasional Bhd (PETRONAS) நாடு முழுவதும் உள்ள அதன் stesen minyak வலையமைப்பில் எரிபொருள் விநியோகம் Jun மாத இறுதி வரை உறுதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உலகளாவிய எரிசக்தி krisis மற்றும் Asia Barat konflik காரணமாக ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள, விநியோக சங்கிலியை தொடர்ந்து செயலில் நிர்வகித்து வருவதாக கூறியுள்ளது.
PETRONAS, அதன் anak syarikat ஆன PETRONAS Dagangan Bhd மூலம் நாட்டின் சுமார் 50 சதவீத எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மீதமுள்ள விநியோகம், மலேசியாவில் செயல்படும் பிற எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. மேலும், நாட்டின் மக்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் கிடைக்குமாறு உறுதி செய்வது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப மட்டுமே எரிபொருள் வாங்க வேண்டும் என்றும், panic buying போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் PETRONAS கேட்டுக்கொண்டுள்ளது. இது அனைவருக்கும் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, PM Anwar Ibrahim, மே மாதம் வரை எரிபொருள் விநியோகம் நிலையாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது PETRONAS அதை Jun மாத இறுதி வரை நீட்டித்து உறுதி செய்துள்ளது. மொத்தத்தில், உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய PETRONAS தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.



