
Picture : Awani
KOTA KINABALU: ASEAN உச்சி மாநாட்டில் பங்கேற்றதை தொடர்ந்து, பிரதமர் அன்வார் இப்ராஹிம் Sabah மாநிலத்திற்கு பணிப்பயணமாக நேற்று இரவு வந்தடைந்தார். அவருடன் மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் வந்திருந்தார். பிரதமரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் Kota Kinabalu அனைத்துலக விமான நிலையத்தில் இரவு 11.12 மணியளவில் தரையிறங்கியது.
பிரதமரின் வருகையை Sabah முதலமைச்சர் Hajiji Noor, துணை முதலமைச்சர் Joachim Gunsalam மற்றும் மாநில உள்ளூராட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சர் Mohd Arifin Mohd Arif ஆகியோர் வரவேற்றனர். இன்று Kudat மற்றும் Pulau Banggi பகுதிகளில் நடைபெறும் பல அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் அன்வார் இப்ராஹிம் பங்கேற்கவுள்ளார். இதில் Pos Dogotan மற்றும் Sekolah Menengah Kebangsaan (SMK) Banggi பள்ளிக்கான விஜயமும் அடங்கும்.
1994ஆம் ஆண்டு, அப்போது துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராஹிம், SMK Banggi புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், Pulau Banggi மக்களுடன் நடைபெறும் “ramah mesra” நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டு பின்னர் Kuala Lumpur திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



