Tazhal Media – தழல் மீடியா

/ May 13, 2026
Latest News
tms

உதவிகள் சரியான மக்களிடம் சேர வேண்டும் – அமைச்சுகளுக்கு PM உத்தரவு

Picture : Awani

KUALA LUMPUR: உலகளாவிய பொருட்கள் விநியோக நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு உதவிகள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்று பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அனைத்து அமைச்சுகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக ஏழைகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் பாதிக்கப்படும் தரப்பினர்கள் எவரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும், ஒவ்வொரு kementerian-மும் தங்களின் திட்டங்கள் மற்றும் உதவிகளை மீளாய்வு செய்து ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் Majlis Tindakan Ekonomi Negara (MTEN) கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது. உலக பொருளாதார நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள Malaysia-வின் பொருளாதார தயார்நிலையும், மக்களின் வாழ்வாதார பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று Anwar தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் உள்ள Pihak Berkuasa Tempatan (PBT) அமைப்புகள் சிறு வியாபாரிகள் மற்றும் penjaja-களுக்கான கடை வாடகைகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். Kuala Lumpur City Hall மற்றும் MARA ஏற்கனவே இந்த முயற்சியை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“Kerajaan MADANI மக்களின் சுமையை குறைத்து, பொருளாதார அதிர்ச்சிகளால் அவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க உறுதியாக செயல்படும்,” என்று Anwar தனது Facebook பதிவில் தெரிவித்தார். இதற்கிடையில், Kementerian Ekonomi மற்றும் Jabatan Perangkaan Malaysia இணைந்து உருவாக்கிய Papan Pemuka Pemantauan Krisis Bekalan Global பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top