Tazhal Media – தழல் மீடியா

/ Mar 10, 2026
Latest News
tms

Azam Baki ஒப்பந்தம் குறித்து முதலில் என்னிடம் கேளுங்கள் – பிரதமர் அன்வார்

Picture : Awani

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையராக உள்ள Tan Sri Azam Baki ஒப்பந்த நிலைமை குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். Azam Baki-யின் ஒப்பந்தம் வரும் மே 12 ஆம் தேதி முடிவடையவுள்ளது. எனினும் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா அல்லது இல்லையா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என அவர் கூறினார்.

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்வார், “அவர்கள் என்னிடம் கேள்வி கேட்கவில்லை, முதலில் என்னிடம் கேளுங்கள்” என்று சுருக்கமாக பதிலளித்தார். இதன் மூலம் Azam Baki தொடர்பான செய்திகளுக்கு பிரதமர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த உறுதியான முடிவையும் வெளியிடவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இதற்கு முன்பு சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம், Azam Baki-யின் ஒப்பந்தம் இனி நீட்டிக்கப்படாது என உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. அந்த தகவல் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், Azam Baki ஒரு நிதி சேவை நிறுவனத்தில் கோடிக்கணக்கான பங்குகளை வைத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகமான Bloomberg வெளியிட்ட தகவலும் கவனத்தை ஈர்த்தது. எனினும், தனது பங்கு வைத்திருப்பு சுமார் RM800,000 மதிப்புடையது என்றும் அது அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டதாகவும் Azam Baki விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவின் அறிக்கை தேசிய தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar, சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் அது பொதுச் சேவை துறையின் ஒழுக்கக் குழுவிற்கு அனுப்பப்பட்டு விரைவில் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Scroll to Top